RWD Menu

Homepage Banner 1Homepage Banner 2Homepage Banner 3Homepage Banner 4
Whats Happening 

The Fund will be setting specific periods
of 
Call for Proposals (CFP) each year in January and July. The next application window starts in 
January 2020. 

For more details, please click here.
Home > Donations > நன்கொடை

நன்கொடை

நம் பிள்ளைகள் அடிப்படை மொழிவளத்தைத் தம் வயதுக்கேற்ற வழியில் வளர்த்துக்கொள்ள நீங்கள் வழங்கும் நன்கொடை உதவும். இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெறப்படும் நன்கொடைக்கு அரசாங்கம் வெள்ளிக்கு வெள்ளி நிதிமானியமாகக் கூடியபட்சம் 50 மில்லியன் வெள்ளிவரை வழங்கும். இந்த நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைக்கு 250 விழுக்காடு வரிக்கழிவு தரப்படும். வரிக்கழிவுக்குத் தகுதிபெறப் பெயரையும் வரி மேற்கோள் எண்களையும் குறிப்பிட வேண்டும்.

நீங்கள் பின்வரும் வழிகளில் இந்த நிதிக்கு நன்கொடைகளை வழங்கலாம்:

  1. எஸ்ஜி கிவ்ஸ் என்னும் இணையத்தளத்தின்வழி நன்கொடை
    நன்கொடை வழங்க விரும்புவோர் www.sggivesorg.org/lkyfb என்னும் இணையத்தளத்தின் வழியாகவும் நன்கொடை வழங்கலாம். இதற்குப் பதிவுசெய்யத் தேவையில்லை.


  2. காசோலைவழி நன்கொடை
    காசோலைவழி நன்கொடை வழங்க விரும்புவோர் ‘Lee Kuan Yew Fund for Bilingualism’ என்று காசோலையில் குறிப்பிட வேண்டும். காசோலையில் குறுக்குக் கோடு இடப்பட்டிருக்க வேண்டும்.
    நன்கொடை வழங்குவோர் காசோலையின் பின்புறத்தில் பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும்:

    • முழுப்பெயர் (அடையாள அட்டையில் உள்ளதுபோல்) அல்லது நிறுவனத்தின் பெயர் (வரிக்கழிவுக்கான ரசீதுக்கு இது தேவைப்படும்)
    • அடையாள அட்டை எண்/வெளிநாட்டினர் அடையாள எண்/தனிச்சிறப்பு எண் (வரி மதிப்பீட்டுக்காக நன்கொடையைத் தானியங்கு முறையில் சேர்ப்பதற்கு)
    • வரிக்கழிவுக்கான ரசீதை அனுப்புவதற்குரிய அஞ்சல் முகவரி
    • தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி

    பூர்த்தி செய்யப்பட்ட காசோலைகளைப் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:
    Ministry of Education 
    1 North Buona Vista Drive 
    MOE  Building, #09-55  
    Singapore 138675

    Attn: Ms Cynthia Chandramuljana, Financial Management Branch

  3. ‘என் வாழ்நாள் சவால்: சிங்கப்பூரின் இருமொழிப் பயணம்’ என்னும் நூலின் கையெழுத்திடப்பட்ட சிறப்புப் பதிப்பைப் பெறுதல்
    திரு லீ குவான் யூ அவர்கள் ‘என் வாழ்நாள் சவால்: சிங்கப்பூரின் இருமொழிப் பயணம்’ என்னும் தம் புதிய புத்தகத்தின் 200 சிறப்புப் பதிப்புப் பிரதிகளில் கையெழுத்திட்டுள்ளார். குறைந்தபட்சம் 10,000 வெள்ளி நன்கொடை வழங்குவோர் இந்தப் புத்தகத்தைப் பெறலாம். நன்கொடையாளர்கள் இந்தப்  படிவத்தை பூர்த்தி செய்து, நிரப்பப்பட்ட படிவத்தை moe_lkyfb@moe.gov.sg என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு வைக்கவும்.

    சீனமொழிப் பதிப்பு மட்டுமே இன்னும் விற்பனைக்கு உள்ளது.