



The Fund will be setting specific periods
of Call for Proposals (CFP) each year in January and July. The next application window starts in January 2020.
of Call for Proposals (CFP) each year in January and July. The next application window starts in January 2020.
For more details, please click here.
Home >
Call for Proposals >
கருத்தாக்கத் திட்டங்களை வரவேற்கிறோம்
கருத்தாக்கத் திட்டங்களை வரவேற்கிறோம்
பிள்ளைகளிடையே இருமொழிக் கற்றலை வளர்க்கும் கருத்தாக்கத் திட்டங்களை அனுப்புமாறு தங்களை வேண்டுகிறோம்.
இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூவின் நிதி நம் பாலர் பள்ளிப் பிள்ளைகளிடையே இருமொழிக் கல்வியை வளர்ப்பதற்குக் கருத்தாக்கத் திட்டங்களை வரவேற்கிறது.
நம் கல்வித்திட்டத்தின் முக்கியக் கூறாக இருமொழிக் கொள்கை விளங்குகிறது. இரு மொழிகள் கற்பது உலகமயமான உலகுக்கு சிங்கப்பூரர்களைத் தயார்படுத்தவும் நம் ஆசியப் பண்பாட்டு மூலங்களை வலுப்படுத்திக்கொள்வதற்கும் உதவுகின்றன.
தொடக்கக் காலத்தில் வழங்கப்படும் பயிற்சி, இருமொழிகளையோ பலமொழிகளையோ எளிதில் கற்றுக்கொள்ளும் ஆற்றலைப் பெருக்கும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. தொடக்கக் காலத்தில் இருமொழிக் கல்விக்கான முயற்சிகளை வலுப்படுத்துவதன் மூலம் குறிப்பாக, கேட்டல், பேசுதல் திறன்களை மேம்படுத்துவதன்வழி, மொழி கற்றலில் நம் பிள்ளைகளுக்கு நல்ல துலங்குநிலையையும் இருமொழிக் கல்வியில் வலுவான அடித்தளத்தையும் வழங்கிட முடியும்.
நம் பிள்ளைகளிடையே இருமொழிக் கல்வி நாட்டத்தை பாலர் பள்ளிகள், இல்லங்கள், சமூகம் ஆகியவற்றில் வளர்க்கும் விதமாக ஆற்றல்மிகு திட்டங்கள் உங்களிடம் உண்டா? உங்கள் கருத்தாக்கத் திட்டத்தை நிதி ஆணையத்துக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.
கற்பித்தல், கற்றல் வளங்கள், செயல் திட்டங்கள், நிகழ்ச்சிகள் முதலியவை தொடர்பான திட்ட அறிக்கைகளுக்கான:
- நிதி விண்ணப்ப வழிகாட்டுக்குறிப்புகள்
- அடிக்கடி எழுப்பப்படும் வினாக்களும் அவற்றிற்கான விடைகளும்
- விண்ணப்ப படிவம்
- விண்ணப்ப படிவத்தோடு இணைக்க வேண்டிய நிதி விண்ணப்ப படிவம்
விண்ணப்பங்களைக் கீழ்க்காணும் வழிகளில் சமர்ப்பிக்கலாம்:
- மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: MOE_LKYFB@moe.gov.sg
- அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி
Ministry of Education
1 North Buona Vista Drive
Singapore 138675
Attention: Lee Kuan Yew Fund for Bilingualism
திங்கள்முதல் வெள்ளிவரை: 8.30am to 5.30pm
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறைத் தினங்கள் : மூடப்பட்டிருக்கும்
விண்ணப்பிப்பவர்கள் மேல் விவரங்கள் அறிய, MOE_LKYFB@moe.gov.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது +65 6872-2220 என்ற எண்ணுடன் தொடர்புகொள்ளலாம்.