



The Fund will be setting specific periods
of Call for Proposals (CFP) each year in January and July. The next application window starts in January 2020.
of Call for Proposals (CFP) each year in January and July. The next application window starts in January 2020.
For more details, please click here.
Home >
About the Fund >
இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூவின் நிதி பற்றிய விவரங்கள்
இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூவின் நிதி பற்றிய விவரங்கள்
கண்ணோட்டம்
இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூவின் நிதி, திரு லீ குவான் யூவின் ‘எனது வாழ்நாள் சவால்: சிங்கப்பூரின் இருமொழிப் பயணம்’ புத்தக வெளியீட்டு விழாவின் போது முதன் முதலில் நவம்பர் 2011 அன்று அறிவிக்கப்பட்டது.
மாறி வரும் வீட்டு மொழிச் சூழலில் இந்நிதியம் இருமொழிக் கல்வியை வளர்ப்பதையும், ஆங்கிலம், தாய்மொழிகளின் கற்றலிலும் கற்பித்தலிலும் கல்வி அமைச்சின் முயற்சிகளை ஊக்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தொடக்கத்தில், இந்நிதி பாலர் பள்ளி நிலையிலான முயற்சிகளை மையகப்படுத்தி இயங்கும். பிள்ளைக்கு ஆதரவான மொழிச் சூழலை உருவாக்கித்தர, இந்நிதி பாலர் பள்ளிகள், இல்லங்கள், சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கிய முயற்சிகளை மையப்படுத்தும்.
நம் தாய்மொழிகள், மரபுடைமை, கலாச்சாரம் ஆகிவை சிங்கப்பூரின்
அடையளம் மற்றும் மதிப்பு ஆகிவற்றின் முக்கிய அங்கமாக திகழ்கின்றன.
இருமொழிக் கல்வியையும் தாய்மொழி கல்வியையும் வாழும் மொழியாகவும்
வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்க உதவும் செயல்திட்டங்களுக்கு இந்நிதி ஆதரவு
வழங்கி வருகிறது.
நமது அமைப்பு
நிதி நிர்வாகக் குழுமம் அனைத்துலக ஆலோசனைக் குழுவிலுள்ள நிபுணர்களின் ஆலோசனையுடன் இந்த நிதி நிர்வகிக்கப்படுகிறது. செயல்திட்டப் பரிசீலனைக் குழு, விளம்பரம் மற்றும் வெளித்தொடர்புக் குழு, முதலீட்டு ஆலோசனைக் குழு, தணிக்கைக் குழு ஆகியவற்றின் ஆதரவையும் நிதி நிர்வாகக் குழுமம் பெற்றுள்ளது.